Close

வருவாய் கோட்டங்கள்

சேலம் மாவட்டம் நிர்வாக வசதிக்காக நான்கு வருவாய் கோட்டங்களாக பிரிக்கப்பட்டுள்ளது. வருவாய் கோட்டம் சார் ஆட்சியர்/துனை ஆட்சியரின் தலைமையின் கீழ் இயங்குகிறது. இவர் கோட்ட நிர்வாக நடுவராகவும் செயல்படுகிறார். வட்டாட்சியர் மட்டத்தில் ஒரு தலைமை உதவியாளர் மற்றும் பணியாளர்களும் நிர்வாகத்தில் கோட்டாட்சியருக்கு உறுதுனையாக செயல்படுகிறார்கள். பணிகளை பொருத்த வரை வருவாய் கோட்ட அலுவலகங்கள், மாவட்ட ஆட்சியரக்தின் ஒரு பிரதிபலிப்பாக இருந்து நிர்வாகதில் ஒரு இடைநிலை அலுவலகமாக செயல் படுகிறது. ஒவ்வொறு வருவாய் கோட்டமும் ஒரு சில வட்டங்களை உள்ளடக்கி அதன் செயல்பாடுகளை கண்கானிக்கிறது.

வருவாய் கோட்டங்களும் அதன் வட்டங்களும் பின்வருமாறு.

1. சேலம் வருவாய் கோட்டம் – சேலம்,சேலம் மேற்கு,சேலம் தெற்கு, ஏற்காடு மற்றும் வாழப்பாடி வட்டங்கள்
2. ஆத்தூர் வருவாய் கோட்டம் – ஆத்தூர்,பெத்தனாயக்கன்பாளையம் மற்றும் கெங்கவல்லி வட்டங்கள்
3. மேட்டூர் வருவாய் கோட்டம் – மேட்டூர்,ஓமலூர் மற்றும் காடையாம்பட்டி வட்டங்கள்
4. சங்ககிரி வருவாய் கோட்டம் – சங்ககிரி மற்றும் எடப்பாடி வட்டங்கள்