Close

வரலாறு

சேலம் மாவட்டத்தில் மனித நாகரீகத்தின் தோற்றம் கற்காலத்திற்கு மிகவும் முந்தய காலத்திலேயே துவங்கியிருக்கிறது. புதிய மற்றும் பழைய கற்காலத்திற்குரிய கற்கலால் ஆன கருவிகள் மற்றும் விலங்கு சானங்களின் சாம்பல் குவியல்கள் இந்த மாவட்டத்தில் கண்டுபிடிக்கப்பட்டதன் மூலம் வரலாற்றுக்கு முந்தய கலாச்சாரம் இருந்ததாக அறியப்படுகிறது. கால அடிப்படையிலான சேலம் மாவட்ட வரலாறு பின்வருமாறு.

பொது சகாப்தத்திற்கு

முன்பு BCE (before common era)

கி.மு3-ஆம் நூற்றாண்டு.

தமிழ் சித்தர் – போகர் அவர்களின் காலம்

புத்த, ஜைன மதங்கள் தொடக்கம்

பொது சகாப்தம்Common Era(CE)

கி.பி முதலாம் நூற்றாண்டு

கி.பி(37-68) ரோம சக்கரவர்த்தி TibericsClaudices Neroஅவர்கள் காலத்திய வெள்ளி காசுகள் சேலம் மாவட்டம் கோனேரிபட்டியில் 1987 ஆம் ஆண்டு கண்டெடுக்கப்பட்டதன் மூலம் இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்பே சேலத்தில், கலாச்சாரம் மற்றும் பொருளாதாரத்தில் மேம்பட்ட சமுதாயம் இருந்ததை அறிய முடிகிறது
கி.பி 2ஆம் நூற்றாண்டு பாண்டிய வம்சத்தின் ஆட்சி

பாண்டியன் நெடுஞ்செழியன் கனைக்கால் இரும்பொறை கொள்ளி மலை பகுதியை ஆண்டார்

கி.பி 4ஆம் நூற்றாண்டு பல்லவ வம்ச ஆட்சி தொடக்கம்
கி.பி 6ஆம் நூற்றாண்டு மகேந்திரவர்ம பல்லவரின் காலம்
சைவசமய கொள்கைகள் மேலோங்கியது.
கி.பி 7ஆம் நூற்றாண்டு நரசிம்மவர்ம பல்லவரின் காலம்.

புத்த, ஜைன மதங்கள் நசிய தொடங்கியது

கி.பி 8ஆம் நூற்றாண்டு பாண்டிய வம்ச ஆட்சி காலம்
கி.பி 9ஆம் நூற்றாண்டு சைவ சமயம் பரவி புத்த ஜைன மதங்கள் முடிவுற்றது. பல்லவர்களின் ஆட்சி தொடக்கம்.
கி.பி 10ஆம் நூற்றாண்டு பல்லவ ஆட்சி முடிவுற்று சோழ வம்சம் தொடக்கம்
கி.பி 11ஆம் நூற்றாண்டு சோழர்கள் ஆட்சி
கி.பி 12ஆம் நூற்றாண்டு சேலத்தின் ஒரு பகுதியில் ஹொய்சாலர்கள் ஆட்சி தொடக்கம்
கி.பி 13ஆம் நூற்றாண்டு ஹொய்சாலர்கள் ஆட்சி நிலைநிறுத்தப்பட்டது. சில பகுதியில் மட்டும் பாண்டியர் ஆட்சி நீடிப்பு.
கி.பி 14ஆம் நூற்றாண்டு 1310 ல் மாலிக்கபூர் சேலம் வழியாக சென்றார்.
1368- சேலம் விஜயநகர பேரரசர் ஆளுகையின் கீழ்
கி.பி 15ஆம் நூற்றாண்டு சாலுக்கியர்களின் ஆட்சி
பாளையக்காரகள் ஆட்சி தொடக்கம்
கி.பி 16ஆம் நூற்றாண்டு மதுரை திருமலை நாயக்கரின் ஆட்சி

ஆத்தூர் உட்பட சேலத்தின் ஒரு பகுதி பேரரசர் கிருஷ்ணதேவராயர் ஆட்சி.

கி.பி 17ஆம் நூற்றாண்டு நாயக்கர், பாளையக்கார்கள் ஆட்சி

உள்ளூர் தலைவர் கட்டி முதலியின் ஆட்சி

கி.பி 18ஆம் நூற்றாண்டு ஹைதர் அலி , திப்பு சுல்தான் ஆட்சி

பிரிட்டீஷ்காரர்களின் ஆட்சிக்கு உட்படல்
1772 – சேலத்திற்கு முதல் பிரிட்டீஷ் ஆட்சியர்

கி.பி 19ஆம் நூற்றாண்டு

1856 நில அளவை மேற்கொள்ளப்பட்டு நிலவரித்திட்டம் ஏற்படுத்தப்பட்டது

கிழக்கிந்திய கம்பெணியின் ஆட்சி முடிவுக்கு வந்து பிரிட்டீஷ் மகாராணியின்

ஆளுகைக்குட்பட்டது

1860 மாவட்டத்தலைநகராக சேலம் ஆக்கப்பட்டது
1862 சேலம் மத்திய சிறைச்சாலை கட்டப்பட்டது
1866-67 கடுமையான பஞ்சம் மற்றும் கொள்ளை நோயால் தாக்கப்பட்டது
1875 கொள்ளை நோய் காலராவால் தாக்கப்பட்டது
1876-78 பெரும் பஞ்சம்
1891-92 மற்றுமொரு பஞ்சம்
1896-97 நூற்றாண்டின் கடைசி பஞ்சம்

20ஆம் நூற்றாண்டு:

இருப்பு பாதை, ஏற்காடு மலைபாதை, மேட்டூர் அணை போன்ற வளர்ச்சிப் பணிகள் மேற்கொள்ளப்பட்டன.

1947 – சேலம் சுதந்திர இந்தயாவின் ஒரு பகுதியானது.

1951 –Provinces and states (Absorption of Enclaves) order 1950 படி மைசூர் மற்றும் மெட்ராஸ் மாநிலத்திற்குமிடையே கிராமங்கள் பரிமாற்றம்

1961- திருச்செங்கோடு வட்டத்திலிருந்து பிரிந்து சங்ககிரி வட்டம் உதயம்

1965- 2-அக்டோபர்-1965 ஆம் தேதி சேலம் மாவட்டம் இரண்டாக பிரிக்கப்பட்டது. சேலம்,ஆத்தூர்,ஏற்காடு,ஓமலூர்,சங்ககிரி,திருச்செங்கோடு,ராசிபுரம், மற்றும் நாமக்கல் ஆகிய எட்டு வட்டங்கள் சேலம் மாவட்டதிலும், தருமபுரி,கிருஷ்ணகிரி,அரூர் மற்றும் ஹோசூர் ஆகிய நான்கு வட்டங்கள் தருமபுரி மாவட்டத்திலும் சேர்க்கப்பட்டது.

1966- ஓமலூர் தாலுக்காவிலிருந்து பிரிந்து மேட்டூர் தலுக்கா உதயம்.இதனுடன் சேலம் மாவட்டத்தில் 9 வட்டங்கள் இருந்தது.

1989 – நாமக்கல் வட்டத்திலிருந்து பிரிந்து பரமத்தி-வேலூர் வட்டம் உதயம்.இதனுடன் 10 வட்டங்கள் ஆனது.

1997 – ஆத்தூர் வட்டத்திலிருந்து பிரிந்து கெங்கவல்லி வட்டமும், சங்ககிரி வட்டத்திலிருந்து பிரிந்து எடப்பாடி வட்டமும் 01-02-1997 தொடக்கம் 02-02-1997 அன்று சேலம் மாவட்டம் இரண்டாக பிரிக்கப்பட்டு புதிதாக நாமக்கல் மாவட்டம் உருவாக்கப்பட்டது. சேலம், ஏற்காடு, ஆத்தூர், கெங்கவல்லி, ஓமலூர், மேட்டூர், எடப்பாடி, சங்க்கிரி ஆகிய 8 வட்டங்களுடன் சேலம் மாவட்டமும் நாமக்கல், ராசிபுரம், திருச்செங்கோடு, பரமத்திவேலூர் ஆகிய 4 வட்டங்களுடன் புதிய நாமக்கல் மாவட்டமும் தொடங்கப்பட்டது

1998 – ஆத்தூர் மற்றும் கெங்கவல்லி வட்டங்களை உள்ளடக்கிய ஆத்தூர் வருவாய் கோட்டம் உருவாக்கப்பட்டது. சேலம் வட்டத்தில் எஸ்டேட் மேனேஜரின் கட்டுப்பாட்டிலிருந்த கிராமங்களை உள்ளடக்கி புதிய வாழப்பாடி வட்டம் உருவாக்கப்பட்டது.
Dec-2013 – சேலம் வட்டம் மூன்று வட்டங்களாக பிரிக்கப்பட்டு ,சேலம்,சேலம் மேற்கு மற்றும் சேலம் தெற்கு என மூன்று வட்டங்கள் உதயம்.Jan-2015 –ஆத்தூர் வட்டத்திலிருந்து பிரிந்து பெத்தநாயக்கன்பாளையம் வட்டம் உதயம்

Jan-2016 – ஓமலூர் வட்டத்திலிருந்து பிரிந்து காடயாம்பட்டி வட்டம் உதயம்

February -2021 – ஆத்தூர் மற்றும் கெங்கவல்லி வட்டங்களிருந்து சில கிராமங்கள் பிரிக்கப்பட்டு தலைவாசல் வட்டம் உருவாக்கப்பட்டது

 

இதனுடன் சேலம் மாவட்டம் தற்போதைய நிர்வாக பிரிவுகளை கொண்டுள்ளது.
சேலம் மாவட்டத்தின் தற்போதைய வருவாய் நிர்வாக அலகுகள்

வரிசை எண் வருவாய் கோட்டம் வருவாய் வட்டங்கள்
1. சேலம் சேலம், சேலம் மேற்கு, சேலம் தெற்கு, வாழப்பாடி, ஏற்காடு
2. ஆத்தூர் ஆத்தூர், கெங்கவல்லி, பெத்தநாயக்கன்பாளையம், தலைவாசல்
3. மேட்டூர் மேட்டூர்,ஓமலூர், காடையாம்பட்டி
4. சங்ககிரி சங்ககிரி, எடப்பாடி