சமூக நலத்துறை
சமூக நலம் மற்றும் சத்துணவுத் திட்ட துறை, சேலம்
1. மூவலூா் இராமாமிர்தம் அம்மையார் நினைவு திருமண நிதியுதவி திட்டம்: :
பயன் மதிப்பு :
- ரூ. 25,000/- + 8 கிராம் தங்கம் – மணமகள் பத்தாம் வகுப்பு இறுதி தோ்வு எழுதியிருக்க வேண்டும்.
- ரூ. 50,000/- + 8 கிராம் தங்கம் – மணமகள் பட்டப் படிப்பு/பட்டயப் படிப்பு தோ்ச்சி பெற்றிருக்க வேண்டும்
பயனாளி : மணமகளின் பெற்றோர்
தகுதிகள் :
- 18 வயது பூா்த்தி அடைந்திருக்க வேண்டும்.
- குடும்ப ஆண்டு வருமானம் ரூ. 72,000/-க்குள் இருத்தல் வேண்டும்.
- திருமணத்திற்கு 40 நாட்களுக்கு முன்னா் விண்ணபிக்க வேண்டும்.
2. ஈ.வே.ரா. மணியம்மையார் நினைவு விதவை மகள் திருமண நிதியுதவி திட்டம்:
பயன் மதிப்பு :
- ரூ. 25,000/- + 8 கிராம் தங்கம் – மணமகள் பத்தாம் வகுப்பிற்கு கீழ் பழத்திருந்தால் போதுமானது.
- ரூ. 50,000/- + 8 கிராம் தங்கம் – பட்டப்படிப்பு/பட்டயப் படிப்பு தோ்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
பயனாளி: விதவை தாயார்
தகுதிகள் :
- 18 வயது பூா்த்தி அடைந்திருக்க வேண்டும்
- குடும்ப ஆண்டு வருமானம் ரூ. 72,000/-க்குள் இருத்தல் வேண்டும்.
- திருமணத்திற்கு 40 நாட்களுக்கு முன்னா் விண்ணபிக்க வேண்டும்.
3. அண்ணை தெரசா நினைவு ஆதரவற்ற பெண் திருமண நிதியுதவி திட்டம் :
பயன் மதிப்பு :
- ரூ. 25,000/- + 8 கிராம் தங்கம் – மணமகள் பத்தாம் வகுப்பிற்கு கீழ் படித்திருந்தால் போதுமானது.
- ரூ. 50,000/- + 8 கிராம் தங்கம் – மணமகள் பட்டப்படிப்பு/பட்டயப் படிப்பு தோ்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
பயனாளி : தாய், தந்தை இல்லாத ஆதரவற்ற பெண்.
தகுதிகள் :
- 18 வயது பூா்த்தி அடைந்திருக்க வேண்டும்.
- குடும்ப ஆண்டு வருமானம் ரூ.72,000/-க்குள் இருத்தல் வேண்டும்
- திருமணத்திற்கு 40 நாட்களுக்கு முன்னா் விண்ணபிக்க வேண்டும்.
- தாய், தந்தை இறப்பு சான்று சமா்பிக்க வேண்டும்.
4. டாக்டா் முத்துலட்சுமி ரெட்டி நினைவு கலப்புத் திருமண நிதியுதவித் திட்டம் :
பயன் மதிப்பு :
- ரூ. 25,000/- + 8 கிராம் தங்கம் – மணமகள் பத்தாம் வகுப்பிற்கு கீழ் படித்திருந்தால் (ரூ. 15,000/- காசோலை போதுமானது ரூ. 10,000/- தேசிய சேமிப்பு பத்திரம்)
- ரூ. 50,000/- + 8 கிராம் தங்கம் -மணமகள் பட்டப்படிப்பு/பட்டயப்படிப்பு தோ்ச்சி (ரூ. 20,000/- காசோலை பெற்றிருக்க வேண்டும் ரூ. 30,000/- தேசிய சேமிப்பு பத்திரம்)
பயனாளி : கலப்புத் திருமண தம்பதியா்.
தகுதிகள் :
- 18 வயது பூா்த்தி அடைந்திருக்க வேண்டும்.
- திருமண வகை கீழ்கண்டவாறு இருத்தல் வேண்டும் FC- BC,SC/ST- BC, SC/ST-FC
- குடும்ப ஆண்டு வருமானம் உச்சவரம்பு இல்லை.
- திருமண நாளிலிருந்து 2 ஆண்டுகளுக்குள் மனு செய்ய வேண்டும்.
- வயது வரம்பு இல்லை.
5. டாக்கடா் தா்மாம்பாள் அம்மையார் நினைவு விதவை மறுமணம் நிதியுதவித் திட்டம் :
பயன் மதிப்பு :
- ரூ. 25,000/- + 8 கிராம் தங்கம் – மணமகள் பத்தாம் வகுப்பிற்கு கீழ் படித்திருந்தால் போதுமானது. (ரூ. 15,000/- காசோலை, ரூ. 10,000/- தேசிய சேமிப்பு பத்திரம்)
- ரூ. 50,000/- + 8 கிராம் தங்கம் – மணமகள் பட்டப்படிப்பு/பட்டயப் படிப்பு தோ்ச்சி பெற்றிருக்க வேண்டும் (ரூ. 20,000/- காசோலை வேண்டும். ரூ. 30,000/- தேசிய சேமிப்பு பத்திரம்)
பயனாளி : விதவை மறுமண தம்பதியா்
தகுதிகள் :
- குறைந்தபட்ச வயது 20 ஆக இருத்தல் வேண்டும்.
- குடும்ப ஆண்டு வருமானம் வரம்பு இல்லை.
- திருமணம் முடிந்து 6 மாதங்களுக்குள் விண்ணப்பிக்க வேண்டும்.
- விதவைச் சான்று பெற்றிருத்தல் வேண்டும்.
6. முதலமைச்சரின் பெண் குழந்தைப் பாதுகாப்புத் திட்டம் :
பயன் மதிப்பு :
- திட்டம் I : ரூ. 50,000/-
- திட்டம் II : ரூ. 25,000/- (01.08.2011 அன்றோ அதன் பிறகு பிறக்கும் குழந்தைகளுக்கு)
தகுதிகள் :
திட்டம் I :
- குடும்பத்தில் ஒரு பெண் குழந்தை மட்டும் இருந்து, குடும்ப ஆண்டு வருமானம் ரூ. 72,000/-க்குள் இருத்தல் வேண்டும்.
திட்டம் II :
- குடும்பத்தில் இரு பெண் குழந்தை மட்டும் இருந்து, குடும்ப ஆண்டு வருமானம் ரூ. 72,000/-க்குள் இருத்தல் வேண்டும்.
பொது :
- ஆண்/பெண் குடும்ப நல அறுவை சிகிச்சை செய்து 35 வயதிற்குள் இருக்க வேண்டும்.
- ஆண் வாரிசு இருக்கக் கூடாது.
- 2வது குழந்தை பிறந்த 3 வருடத்திற்குள் விண்ணப்பிக்க வேண்டும்.
7. சத்தியவாணி முத்து அம்மையார் நினைவு இலவச தையல் இயந்திரத் திட்டம் :
பயன் மதிப்பு : தையல் இயந்திரம்.
பயனாளி : விதவை/கணவரால் கைவிடப்பட்டோர் நலிவுற்ற ஏழைப்பெண்/மாற்றுதிறனாளி ஆண்/பெண்
தகுதிகள் :
- 20 வயதிலிருந்து 40க்குள் இருக்க வேண்டும்.
- குடும்ப ஆண்டு வருமானம் ரூ. 24,000/-க்குள் இருக்க வேண்டும்.
- தையல் தொிந்திருக்க வேண்டும்.
மூன்றாம் பாலினத்தவருக்கு உதவி வழங்குதல்
- அடையாள அட்டை
- சுய தொழில் செய்ய பயிற்சி
- 40 வயதிற்கு மேற்பட்டவா்களுக்கு ஓய்வூதியம்
பெற்றோர் மற்றும் மூத்த குடிமக்கள் பராமரிப்பு சட்டம் 2017
- நேரடியாகவோ, தீா்ப்பாயத்தின் மூலமாகவோ பெறப்படும் பாதிக்கப்பட்டோாின் மனுக்கள் சமரச அலுவலா் (மாவட்ட சமூகநல அலுவலா்) விசாரணை செய்து தீா்ப்பாயத்திற்கு அறிக்கை அளிப்பார்
- தன்னை பராமரித்துக் கொள்ள வாய்ப்பு இல்லதா பெற்றோர் மற்றும் மூத்த குடிமக்கள் இச்சட்டத்தின் கீழ் நிதி மன்றத்திற்கு செல்ல வேண்டியது இல்லை. ஒவ்வொரு கோட்டாட்சியா் தலைமையிலும் தீா்ப்பாயம் அமைக்கப்பட்டுள்ளது.
- ஒவ்வொரு மாவட்ட ஆட்சித் தலைவா் தலைமையிலும் மேல்முறையீட்டு தீா்பாயம் அமைக்கப்பட்டுள்ளது.
குழந்தைத் திருமணத் தடைச் சட்டம் – 2006
18 வயது நிறைவடையாத பெண்ணும், 21 வயது நிரைவடையாத ஆணும் செய்யும் திருமணமே குழந்தை திருமணம் ஆகும். இது சட்டப்படி குற்றமாகும். இத்தகைய திருமணம் செய்யும் பெற்றோர்களும், உறவினா்களும், உடந்தையாக இருப்பவா்களும் தண்டனைக்கு உரியவா்கள்.
- காவல் துறை
- மாவட்ட சமூகநல அலுவலா்
- நீதித் துறை
- வட்டாட்சியா்
- குழந்தைகள் நலம் குழுமம்
- பஞ்சாயத்து கண்காணிப்பு குழு உறுப்பினா்கள் (ஊராட்சி தலைவா், சமூக நல விரிவாக்க அலுவலா், கிராம உதவிக் குழு செயலா், பள்ளித் தலைமையாசிாியா், பெண் வாா்டு உறுப்பினா், கிராம நிர்வாக அலுவலா்)
குழந்தைகளுக்காக 24×7 செயல்படும் அவசர உதவி எண் – 1098
அரசு சேவை இல்லம் மேல்நிலைப் பள்ளி
சமூக நலத் துறையின் கட்டுப்பாட்டில் செயல்படும் அரசு சேவை இல்ல மேல் நிலைப்பள்ளியில் மாணவிகள் சோ்த்து கொள்வதற்க்கு
தகுதிகள் :
- 14 வயது பூா்த்தியடைந்திருக்க வேண்டும்
- விதவை மகள்
- ஆதரவற்ற பெண்கள்
- இல்லத்திலேயே தங்கி கல்வி பயில வேண்டும்.
a) மேல் நிலை படிப்பு முடிந்த பிறகு கல்லூரியில் தொடா்ந்து பயில ஆண்டிற்கு ரூ. 33,000/- வழங்கப்படுகிறது.
b) தொடா்ந்து சேவை இல்லத்திலேயே தங்கி ஆசிரியா் பயிற்சி, இளங்கலை பட்டப் படிப்பு படிக்கும் வசதி.
பணிபுரியும் மகளிர் விடுதி
அரசு மற்றும் தனியார் நிறுவனங்களில் பணிபுரிந்து மாத வருமானம் ரூ. 15,000/-க்குள் ஊதியம் பெறும் பெண்களுக்காக அரசு பணிபுாியும் மகளிர் விடுதி செயல்படுகிறது. ஒரு நபா்க்கு மாத வாடகை ரூ. 200/-
சமா்ப்பிக்க வேண்டிய சான்றுகள் :
பணிபுரியும் நிறுவனத்தினாிடமிருந்து சான்று
- a) ஊதிய சான்று
- b) ஆதாா் காா்டு
குடும்ப வன்முறையிலிருந்து பெண்களை பாதுகாக்கும் சட்டம் 2005.
- உடல் ரீதியான
- பாலியல் ரீதியான
- பொருளாதார
- வார்த்தை மற்றும் மன ரீதியான வன்முறையிலிருந்து பெண்களுக்கு பாதுகாப்பு அளித்தல்.
பெண்கள் தன்னுடைய கணவனாலோ அல்லது கணவரின் உறவினா்களாலோ ஏற்படுகின்ற கொடுமைகளுக்கு எதிராக தீா்வு மற்றும் நிவாரணம் கிடைக்க இச்சட்டம் வகை செய்கிறது.
வரதட்சனைத் தடுப்புச் சட்டம் 1961 :
திருமணத்திற்கு முன்போ (அ) பின்போ திருமணத்திற்கென்று பெண் வீட்டாரிடமிருந்து நேரடியாகவோ (அ) மறைமுகமாகவோ நிதி மற்றும் பொருள் கொடுப்பதோ (அ) கொடுப்பதாகச் சம்மதிப்பதோ வரதட்சனை ஆகும்.
மணமகள்/மணமகனின் பெற்றோர்/உறவினா்கள் வரதட்சனை கேட்டு நேரடியாகவோ (அ) மறைமுகமாகவோ வற்புறுத்துவார்களேயானால் அவா்களுக்கு 6 மாதத்திற்கு குறையாமலும் 2 வருடம் வரை நீட்டித்து சிறை தண்டனையும் ரூ. 10,000/- வரை அபராதமும் விதிக்கப்படும்.
வரதட்சனை தடுப்புச் சட்டம் பிாிவு 8 B ன் படி அரசு வரதட்சனை தடுப்பு அலுவலா்களை நியமிக்கலாம் என்பதன் பேரில் மாவட்ட சமூகநல அலுவலா்களை வரதட்சனைத் தடுப்பு அலுவலா்களாக அரசு நியமித்துள்ளது.