• சமூக ஊடக வலைதளங்கள்
  • Site Map
  • Accessibility Links
  • தமிழ்
Close

சங்ககிரி கோட்டை

இந்திய தொல்லியல் துறையினரால் பராமரிக்கப்படும் கோட்டைகளுல் சங்ககிரி கோட்டையும் ஒன்றாகும். இக்கோட்டை சேலம் ஈரோடு சாலையில் சேலத்திலிருந்து 38 கி.மீ தூரத்திலும் ஈரோட்டிலிருந்து 22 கி.மீ.தூரத்திலும் உள்ளது. விஜயநகர பேரரசரால் 15 நூற்றாண்டில் கட்டப்பட்டதாகும். 12 கோட்டை மதில்களுடன் உள்ள இக்கோட்டையில் சில மதில்கள் ஆங்கிலேயர்களால் கட்டப்பட்டது. கொங்குநாட்டிற்கான வரி வசூல் கிடங்காகவும் ஆங்கிலேயர்களால் பயன்படுத்தப்பட்டுள்ளது. இது மன்னர் திப்பு சுல்தானின் முக்கியமான படைத்தளமாகவும் பின்னர் ஆங்கிலேயர்களின் படைத்தளமாகவும் இருந்துள்ளது. இக்கோட்டையில் ஒருபுறம் மிக அதிக சரிவுடன் கானப்படுவதாலும் ஒருபுறத்திலிருந்து மட்டுமே மேல செல்லக்கூடியதாகவும் இருப்பதால் இரானுவ முக்கியத்துவமுடைய பகுதியாக இருந்துள்ளது. இதிலே, ஒரு தானியக்கிடங்கு, இரண்டு மசூதிகள், இரண்டு பெருமாள் கோவில்கள், ஆங்கிலேயர்கள் பயன்படுத்திய நிர்வாகக்கட்டிடங்கள் மற்றும் கல்லறைகள் உள்ளன. சுதந்திர போராட்ட வீரர் தீரன் சின்னமலை ஆங்கிலேயர்களால் இங்கே தூக்கிலிடப்பட்டார்

Sangagiri Fort image2