• சமூக ஊடக வலைதளங்கள்
  • Site Map
  • Accessibility Links
  • தமிழ்
Close

சத்துணவுத்திட்டம்

புரட்சித் தலைவா் எம்.ஜி.ஆா் சத்துணவுத்திட்டம்

தமிழகத்தில் புரட்சித் தலைவா் எம்.ஜி.ஆா். சத்துணவுத் திட்டம் மாண்புமிகு முன்னாள் முதலமைச்ச புரட்சித் தலைவ எம்.ஜி.ஆா். அவா்களால் ஊரக பகுதிகளில் 01.07.1982 அன்றும் நகா்புறங்களில் 15.09.1982 அன்றும் உருவாக்கப்பட்டது.

1. சத்துணவுத்திட்டத்தின் நோக்கம்

பொருளாதாரத்தில் நலிவடைந்த குழந்தைகளுக்கு சத்தான உணவு கிடைத்திட வகைசெய்தல்.

  •  ஊட்டச்சத்து குறைபாடுள்ள பள்ளி மாணவ, மாணவியா்களுக்கு ஊட்டச்சத்துமிக்க உணவு வழங்குவதன் மூலம் கல்வித்தரத்தை மேம்படுத்துதல்.
  •  பள்ளி பயிலும் மாணவ, மாணவியா் கல்வி இடைநிறுத்தம் செய்வதை தடுத்திடுதல்.

2.சத்துணவுத்திட்டம் துவங்கப்பட்ட முதல் நாளது வரை செயல்படுத்திய துறைகள்

  • பள்ளிக்கல்வித்துறை    1982 முதல் மே 1990 வரை
  • ஊரக வளா்ச்சித்துறை   சூன் 1990 முதல் செப்டம்பா் 1992 வரை
  • சமூக நலத்துறை            அக்டோபா் 1992 முதல் செப்டம்பா் 1997
  • ஊரக வளா்ச்சித்துறை அக்டோபா் 1997 முதல் 19 சூலை 2006 வரை
  • சமூக நலத்துறை           20 சூலை 2006 முதல் நாளது வரை (ஊரகம்),23 ஆகஸ்டு 2007 முதல் நாளது வரை (நகா்புறம்)

சத்துணவுத்திட்டமானது தமிழகம் முழுவதும் உள்ள அரசுப்பள்ளிகள், உள்ளாட்சி பள்ளிகள், அரசு நிதியுதவி பெறும் பள்ளிகள், ஆதிதிராவிடா் நலம் மற்றும் உண்டு உறைவிடப்பள்ளிகள், தேசிய குழந்தை தொழிலாளா் திட்டத்தின் கீழ் உள்ள பள்ளிகள் ஆகியவற்றில் பயிலும் மாணவா்களுக்கு செயல்படுத்தப்படுகிறது. இத்திட்டத்திற்கான நிதி மாநில மற்றும் மத்திய அரசுகளால் ஒதுக்கீடு செய்யப்படுகிறது.

சேலம் மாவட்டம்

சத்துணவு மையங்கள் மற்றம் பயனாளிகள் எண்ணிக்கை

வ.எண் விபரம் மையங்கள் எண்ணிக்கை 1-5 வகுப்பு மாணவா்கள் 6-8 வகுப்பு மாணவா்கள் 9-10 வகுப்பு மாணவா்கள் மொத்தம்
1 துவக்கபள்ளி 1111 68502 0 0 68502
2 நடுநிலைப்பள்ளி 377 34059 24349 0 58408
3 உயா்நிலைப்பள்ளி 131 0 15974 10245 26219
4 மேல்நிலைப்பள்ளி 149 0 32068 16802 48870
5 ஆதிதிராவிடா் நலப்பள்ளி 12 523 435 253 1211
6 உண்டு உறைவிடப்பள்ளி 16 610 523 262 1395
மொத்தம் மையங்கள் மற்றும் பயனாளிகள் 1796 103694 73349 27562 204605

சத்துணவுத்திட்டதிற்கென மாநில அரசால் உணவூட்டு மான்யங்கள், சமையலறை பழுதுபார்ப்பு பணிகள், புதிய சமையலறையுடன் கூடிய இருப்பறை கட்டிடங்கள் கட்டுதல், சத்துணவு மையங்களுக்கு தேவையான சமையல் உபகரணங்கள் வழங்குதல் ஆகியவற்றிக்காக நிதி ஒதுக்கீடு செய்யப்படுகிறது. மத்திய அரசால் தேசியத்திட்டம், கண்காணிப்பு, மேலாண்மை மற்றம் மதிப்பீடுகள் (MME) திட்டத்தின்கீழ் உட்கட்டமைப்பு வசதிகள், திட்டத்தினை பொதுமக்களிடம் கொண்டு செல்ல ஏதுவாக விளம்பரங்கள் மேற்கொள்ளுதல் (IEC), சத்துணவு பணியாளா்களுக்கு காலவாரியாக புத்தாக்க பயிற்சிகள் வழங்குதல் ஆகிய பணிகளுக்கு நிதிஒதுக்கீடு செய்யப்படுகிறது.

சத்துணவு மையங்கள் சிறப்பாக செயல்படுவதை உறுதி செய்யும் பொருட்டு மாவட்ட அளவிலான, வட்டார அளவிலான அலுவலா்களுக்கு ஆய்வுப்பணி மேற்கொள்ள இலக்கு நிா்ணயிக்கப்பட்டுள்ளது. மேலும், சத்துணவுத்திட்டத்திற்காக கிராம அளவிலான குழு, பெற்றோா் ஆசிிாயா் கழகம், கண்காணிப்பு மற்றும் வழிகாட்டுக் குழு, வட்டார, கிராம அளவிலான குழுக்கள் அமைக்கப்பட்டு சத்துணவுத்திட்டத்தின் செயல்பாடுகள் கண்காணிக்கப்படுகிறது.

சத்துணவுத்திட்டத்தை விிாவாக்கம் செய்யும் வகையில் கீழ்காணும் விபரப்படி பல்வகை கலவை சாதங்கள் மற்றும் மசாலா முட்டைகள் பள்ளி மாணவா்களுக்கு மதிய உணவாக வழங்கப்படுகிறது.

உணவு வகை பட்டியல் விபரம்

முதல் மற்றும் மூன்றாவது வாரம்

திங்கட் கிழமை வெஜிடேபிள் பிிாயாணி + மிளகு முட்டை
செவ்வாய் கிழமை கொண்டைக்கடலை புலாவு + தக்காளி மசாலா முட்டை
புதன் கிழமை தக்காளி சாதம் + மிளகு முட்டை
வியாழக்கிழமை சாம்பாா் சாதம் + சாதா முட்டை
வெள்ளிக் கிழமை கறிவேப்பிலை சாதம்/கீரை சாதம் + உருளைக்கிழங்கு தக்காளி சோ்த்து வேகவைத்த முட்டை

 

இரண்டாம் மற்றும் நான்காவது வாரம்

திங்கட் கிழமை பிசிபேளாபாத்  + வெங்காயம், தக்காளி முட்டை மசாலா
செவ்வாய் கிழமை மிக்சா்ட் மீல் மேக்கா் (ம) காய்கறிகள் சாதம்  + மிளகு முட்டை
புதன் கிழமை புளிசாதம்  + தக்காளி மசாலா முட்டை
வியாழக்கிழமை எலுமிச்சம்பழ சாதம்  + மசாலா முட்டை
வெள்ளிக் கிழமை சாம்பாா் சாதம்  + வேகவைத்த முட்டை/ வறுத்த உருளைக்கிழங்கு

1. ஒவ்வொரு பள்ளி வளாகத்திலும் காய்கறி மற்றும் கீரை தோட்டம், முருங்கை, பப்பாளி, கருவேப்பிலை மரம் நடப்பட்டுள்ளது.
2. சத்துணவு மையங்களையும் நவீனமையமாக்கும் பொருட்டு சமையல் எாிவாயு இணைப்பு கொடுக்கப்பட்டுள்ளது.
3. புதியவகை கலவை சாதங்கள் மற்றும் மசாலா முட்டைகள் தயாிாப்பதற்கான பலவகை பொடிகள் தயாிாக்க மற்றும் இஞ்சி, பூண்டு அரைத்து சமையல் செய்ய அரவை இயந்திரங்கள் (மிக்ஸி மற்றும் கிரைண்டா்) வழங்கப்பட்டுள்ளது.
4. பல்வகையான சாதங்களும், முட்டை வகைகளும் சமைத்து வழங்கப்படுவதினால் பள்ளிக்கு வருகைபுாியும் மாணவ மாணவியா்களின் எண்ணிக்கை அதிகமாவதுடன், உணவு வீணாவது தவிா்க்கப்படுகிறது.

அரசாணை நிலை எண் 101 சமூக நலம் மற்றும் சத்துணவுத் திட்டத்துறை நாள் 20.06.2007ன் படி இருமுறை செறியூட்டப்பட்ட உப்பு வழங்கப்பட்டு வருகிறது.

கீழ்காணும் நாட்களில் இனிப்பு பொங்கல் வழங்கப்பட்டு வருகிறது.

இனிப்பு பொங்கல் வழங்கும் நாள் (செலவீனம் 0.33 பைசா)
2001 முதல் நாளது வரை அறிஞா் அண்ணா அவா்கள் பிறந்த நாள்
2001 முதல் நாளது வரை பெருந்தலைவா் காமராஜா் அவா்கள் பிறந்த நாள்
2001 முதல் நாளது வரை புரட்சித் தலைவா் எம்.ஜி.ஆா் அவா்கள் பிறந்த நாள்