ஏற்காடு
வழிகாட்டுதல்ஏற்காடு:
ஏற்காடு சேலத்திற்கு அருகாமையில் கிழக்கு தொடர்ச்சி மலை சேர்வராயன் மலைத்தொடரில் உள்ள மலைத்தளமாகும். இது கடல் மட்டத்திலிருந்து 1515 மீட்டர்-4969 அடி உயர்த்தில் உள்ளது. இதன் பரப்பளவு 382.67 ச.கிமீ. ஏற்காடு, ஊராட்சி ஒன்றியத்தை உள்ளடக்கியதாகவும் வட்டத் தலைமையிடமாகவும் உள்ளது. மிகவும் சிக்கனமான மலைவாச தலமாகும். எனவே இது ஏழைகளின் ஊட்டி என்றழைக்கப்படுகிறது.
சேரும்வழி:
• வான்வழி: அருகிலுள்ள விமான நிலையம் –பெங்களூரு 250 கிமீ , கோயம்புத்தூர் – 190 கி.மீ
• இரயில் : சேலம் இரயில் சந்திப்பு (35 கி.மி)
• பேருந்து : சேலத்திலிருந்து ஏற்காட்டுக்கு உடனக்குடன் பேருந்து வசதி உள்ளது. சேலம் பேருந்து நிலையத்திலிருந்து சென்னை,மதுரை, திருச்சி, கோவை, திருநெல்வேலி,திருவண்ணாமலை, கோயம்புத்தூர், புதச்சேரி, திருப்பதி போன்ற அனைத்து நகரங்களுக்கும் பேருந்து வசதியுள்ளது,
அண்ணா பூங்கா: அண்ணா பூங்கா ஏரிக்கு அருகாமையில் அமைந்துள்ளது. இதில் கொடைவிழாவின் போது மலர்கண்காட்சி நடைபெறும். இதனுள்ளே உள்ள ஜப்பானிய பூங்கா கண்டிப்பாக கானவேண்டிய ஒன்றாகும்.
நுழைவு கட்டணம்:
பெரியவருக்கு ரூ.15 , குழந்தைகளுக்கு ரூ.10 வீடியோ கேமரா ரூ.50 கேமரா.ரூ.25 .
தொலைபேசி .04281-222126
தோட்டக்கலைதுறை பண்ணை:
பல்வேறு தாவரங்களின் கன்றுகள் இங்கு கிடைக்கின்றன. நுழைவு கட்டணம் பெரியவர்களுக்கு ரூ.30/- கேமரா ரூ.50/-
தாவரவியல் பூங்கா:
இந்திய தாவரவியல் கழகத்தால் பராமரிக்கப்படுகின்ற தாவரவியல் பூங்கா அதிக தாவரங்களின் தொகுப்புடன் உள்ளது. இங்கு மணிப்பாறையில் கல்லால் மோதினால் மணிச்சத்தம் கேட்கும்.
கிள்ளியூர் நீர்வீழ்ச்சி:
ஏற்காட்டிலிருந்து 3 கி.மீ. தொலைவில் உள்ளது கிள்ளியூர் நீர்வீழ்ச்சி ஏரியிலிருந்து வழிந்தோடும் நீர் இங்கு நீர்வீழ்ச்சியாக விழுகிறது.
தொலைபேசி..0427-2416449
லேடிஸ் சீட், ஜென்ஸ், சில்ரன்ஸ் சீட்:
இங்கு பாறைகள் இயற்கையாகவே காட்ச்சித்தளங்களாக அமைந்துள்ளது. இங்கிருந்து சேலம் நகரத்தின் அழகை கண்டுகளிக்கலாம்.
சேர்வராயன் கோவில்:
இது ஒரு பெருமாள் குகைக்கோவிலாகும். மே மாத்த்தில் இங்கு நடைபெறும் திருவிழா மிக வண்ணமயமானதாகவும் ஆயிரகணக்கான மலைவாழ் மக்கள் கொண்டாடுவதாகவும் உள்ளது.
நேரம் : காலை. 6 முதல் இரவு 8 வரை
தொலைபேசி.0427-2267845.
பெரிய ஏரி:
இங்க அமைந்துள்ள இயற்கையான ஏரி மிகப்பெரிதானதாகும். இதைச்சுற்றிலும், மான்பூங்கா, பொழுதுபோக்கு பூங்கா, அண்ணாபூங்கா, ஹோட்டல் தமிழ்நாடு பொன்றவைகளால் சூழப்பட்டுள்ளது. படகு சவாரி மிக ரம்மியமானதாகும்.
படகுசவாரி நேரம்.
காலை 9 முதல் மாலை 5.30 வரை.
கட்டணம் :
8நபர்களுக்கு–ரூ.320 4நபர்களுக்கு–ரூ.110 2நபர்களுக்கு –ரூ.80
தொலைபேசி.04281-222273
பகோடா காட்சி முனை:
ஏற்காட்டின் கிழக்கு முனையில்அமைந்துள்ள இந்த காட்சிமுனை பிரமிட் பாய்ன்ட் என்றும் அழைக்கப்படுகிறது. இங்கு ராமர் கோவில் ஒன்றுள்ளது. இங்கிருந்து அயோத்தியாபட்டணம் பகுதிகளை கண்டுகளிக்கலாம். இது ஏற்காட்டிலிருந்து 5 கி.மீ தொலைவில் உள்ளது.
ராஜ ராஜேஸ்வரி கோவில்:
இது ஏற்காட்டிலிருந்து சேர்வராயன் கோவில் வழித்தடத்தில் 4 கி.மீ தொலைவில் உள்ளது. இது தெய்வங்களின் தெய்வமென போற்றப்படுகிறது.
நேரம் காலை 7 முதல் மதியம் 12 வரை , மாலை 4 முத்ல இரவு 7வரை
தொலைபேசி:04281-222354.
பட்டு பண்ணை, ரோஜா தோட்டம்:
இங்குள்ள பட்டு பண்ணையில் மெல்பெரி செடிகள் பெருவாரியாக வளர்க்கப்படுகிறது. இங்கு பட்டு பூச்சி வளர்ப்பையும், அதிலிருந்து பட்டு நூல் தயாரிப்பையும் கானலாம். இங்குள்ள ரோஜா தோட்டத்தல் பல வண்ண ரோஜா மலர்கள் வளர்க்கப்படுகின்றன. இங்கு ரோஜா நாற்றுக்கள் விற்பனை செய்யப்படுகிறது. இது ஏற்காட்டிலிருந்து 2 கி.மீ தொலைவில் உள்ளது.