மேட்டூர் அணை மற்றும் பூங்கா
வழிகாட்டுதல்மேட்டூர் அணை – வரலாறு
காவிரி ஆற்றின் குறுக்கே சேலம் மாவட்டம், மேட்டூரில் மேட்டூர் அணை 1925 ஆம் ஆண்டு துவங்கி 1934 ஆம் ஆண்டு கர்னல் W.M எல்லீஸ் அவர்களின் வடிவமைப்பின்படி ரூ4.5 கோடி மதிப்பீட்டில் கட்டிமுடிக்கப்பட்டது. இந்த அணை கட்டப்பட்ட சமயத்தில் இதுதான் உலகிலேயே உயரமான நேர்கோட்டில் அமைந்த நீர்த்தேக்கமாகும்.
மேட்டூர் அணையின் மூலம் தமிழ்நாட்டில் உள்ள 12 மாவட்டங்களில் சுமார் 16.05 இலட்சம் ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெறுகிறது. மேட்டூர் அணை மற்றும் காவிரி ஆற்றிலிருந்து பல மாவட்ட பொதுமக்களின் குடிநீர், கல்வி நிறுவனங்கள் மற்றும் தொழிற்சாலைகள் பயன்பாட்டிற்காகவும் தண்ணீர் எடுத்து பயன்படுத்தப்பட்டு வருகிறது.
மேட்டூர் அணையிலிருந்து தண்ணீர் திற்கும்போது அணை மற்றும் சுரங்க மின் நிலையம் மூலம் 250 மெகாவாட் மற்றும் காவிரி ஆற்றில் 7 கதவணை மின் நிலையங்கள் மூலம் மொத்தம் 210 மெகாவாட் மின் உற்பத்தி செய்யப்படுகிறது.
மேட்டூர் அணை கட்டிமுடிக்கப்பட்டு 83 ஆண்டுகளுக்கு பிறகு முதன்முதலாக அணையின் நீர்பரப்பு பகுதியில் படிந்துள்ள வண்டல் மண்ணை விவசாயிகளுக்கு இலவசமாக வழங்கும் திட்டம் மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களால் 28-05-2017 அன்று துவக்கப்பட்டு விவசாயிகள் பயனடைந்து வருகின்றனர்.
மேட்டூர் அணையின் நீரியியல் விவரங்கள்
அட்சரேகை – 11’ 48’ 11’’ வடக்கு
தீர்க்கரேகை – 77’ 48’ 24’’ கிழக்கு
அணையின் மொத்த நீளம் – 5300 அடி
அணையின் அதிகபட்ச உயரம் – 214 அடி
அணையின் அதிகபட்ச அகலம் – 171 அடி
அணையின் மேல்பகுதி அகலம் – 20 அடி 5 இன்ச்
அணையின் மேல்பகுதியில் சாலையின் அகலம் – 16 அடி
சுரங்கத்தின் நீளம் – 4400 அடி
அதிகபட்ச நீர்த்தேக்கும் உயரம் – 165 அடி
உபயோகப்படுத்தக்கூடிய தண்ணீர் உயரம் – 120 அடி
அணையின் மொத்த கொள்ளளவு – 95660 மி.கன அடி
அணையின் பயனுள்ள கொள்ளளவு – 93470 மி.கன அடி
முழுநீர்த்தேக்க மட்டத்தில் நீர்பரப்பின் நீளம் – 33 மைல்கள்
அதிகபட்ச நீர்பரப்பு பகுதி – 59.25 ச.மைல்கள்
நீர்பிடிப்பு பகுதி – 16300 ச.மைல்கள்
அணையின் மதகுகள்
16 கண் உபரிநீர் போக்கி – 16 * 60 அடி * 20 அடி
8 கண் மேல்மட்ட மதகு – 8 * 10.6 அடி * 16 அடி
5 கண் கீழ்மட்ட மதகு – 5 * 7 அடி * 14 அடி
அணைமின் நிலையம் – 4 விசைபொறி
சுரங்கமின் நிலையம் – 4 விசைபொறி
காவிரி ஆறு சேலம் மாவட்டத்திற்குள் நுழையும் இடத்தில், சேலம் நகரத்திலிருநத்து 60 கி.மீ. தொலைவில் உள்ள மேட்டூரில் உள்ளது.இதன் எதிரில் செயற்கை நீர்வீழ்ச்சிகள் மற்றும் அழகிய புல்தரைகளுடன் கண்ணை கவரும் விதத்தில் அழகு மிகுந்ததாக காட்சியளிக்கும் பூங்காவும் உள்ளது.
தொலை பேசி எண்..04298-242600