Close

கோயில்கள் மற்றும் மசூதிகள்

வழிகாட்டுதல்

கந்தசாமி கோவில்:
சேலத்திலிருந்து திருச்செங்கோடு வழியில் 22 கி.மீ தொலைவில் உள்ளது சுந்தர கந்தாசாமி கோவில். மாவட்டத்திலுள்ள முக்கியமான 7 கோவில்களில் இதுவும் ஒன்றாகும். தை பூசம் உட்பட அனைத்து முருகக்கடவுள் விழாக்களும் மிக விமர்சையாகக் கொண்டாடப்படுகிறது

வழிபாட்டு நேரம் : காலை 6 மனி முதல் மாலை 8 மனி வரை
தொலைபேசி : 04288-287511

குமரகிரி முருகன் கோவில்:
சேலம் உடையாப்பட்டி புறவழிச்சாலையில் ஒரு சிறு குன்றின் மேல் அமைந்துள்ள அழகிய கோவிலாகும். சேலம் நகரத்திலிருந்து 6 கி.மீ தூரத்திலுள்ளது.

தொலைபேசி : 0427-2242789

1008 சிவலிங்கம் கோவில்:
சேலம் கோவை நெடுஞ்சாலையில் அரியானூர் அருகில் உள்ள சிறு குன்றில் விநாயகா குழுமத்தினரால் பராமரிக்கப்படும் இக்கோவிலில் 1008 சிவலிங்கங்கள் நந்தியுடன் அமைக்கப்பட்டுள்ளது.

வழிபாட்டு நேரம்: காலை 7.30 முதல் மதியம் 12.30வரை மற்றும் மாலை 4 முதல் 8 வரை தொலைபேசி. 0427-3987000.

கோட்டை மாரியம்மன் கோவில்:
இந்த சேரநாட்டை சேர்ந்த சேர அரசனால் கட்டப்பட்ட பழமையான கோவிலாகும். இது நகரின் மத்தியிலேயே உள்ளது. இதன் தெய்வம் மலைமாரி என்று அழைக்கப்படுகிறது.

தொலைபேசி :0427-2267845

கந்தாஸ்ரமம் :
சேலத்திலிருந்து 5 கி.மீ தொலைவில் உடையாப்பட்டி அருகே சிறிய குன்றின் மேல் சாந்தானந்த பிரமேந்திர சரஸ்வதி அவர்களால் நிர்மானிக்கப்பட்ட முருகன் கோவிலாகும். ஜருகுமலையின் வடக்கு பகுதி முடிவில் கன்னிமார் ஒடையின் கரையில் அமைந்துள்ளது.

தொலைபேசி :0427-2240660.

ஊத்துமலை சத்தியநாராயண சித்தர் பீடம் :
இது சேலத்திலிருந்து 6 கி.மீ தொலைவில் சீலநாயக்கன்பட்டி அருகில் உள்ள ஊத்துமலையில் அமைந்துள்ளது. தமிழ்நாட்டில் வேறெங்குமில்லாத சிறப்புடன் இந்த சத்திய நாராயண கோவில் அமைந்துள்ளது.

வழிபாட்டு நேரம் :காலை 6 முதல் மதியம் 12 மற்றும் மதியம் 2 முதல் இரவு 8 .
தொலைபேசி  :0427-2465477.

சித்தர் கோவில்:
பதினென் சித்தர்களில் ஒருவரான கலங்கானி சித்தரின் ஜீவசமாதி அமைந்துள்ள இடமான கஞ்சமலை மலைசரிவு பகுதியில் அமைந்துள்ளது இக்கோவில். இது சேலத்திலிருந்து இளம்பிள்ளை செல்லும் வழியில் 12 கி.மீ. தொலைவில் அமைந்துள்ளது.

தொலைபேசி .0427-2491389.

அழகிரிநாதர் கோவில்:
சேலம் நகரத்தின் மையத்தில் அமைந்தள்ள இக்கோவில் கோட்டை பெருமாள் கோவில் என்றழைக்கப்படுகிறது. இங்கே

நேரம்:காலை 6 முதல் மதியம் 12 வரை & மாலை 5 முதல் இரவு 8 வரை

சுகவனேஸ்வரர் கோவில்:
சேலம் மாநகர மையத்தில் அமைந்துள்ள இந்த சிவன் கோவில் மிகப்பழமை வாய்ந்த ஒன்றாகும். இங்கே பல வறலாற்று நினைவுச்சின்னங்களையும், சிலைகளையும் கானலாம்.

வழிபாட்டு நேரம் :காலை 6 முதல் மதியம் 12 வரை, மதியம் 3.30 முதல் இரவு 8.30 வரை
தொலைபேசி .0427-2450954.

உத்தமசோழபுரம் கரபுரநாதசுவாமி கோவில்:
உத்தமசோழரின் நகரம் என்றழைக்கப்பட்ட திருமணிமுத்தாறின் கரையில் உள்ள சிற்றுரான உத்தமசோழபுர்தில் அமைந்துள்ள மிகப்பழமையான சிவன் கோவிலாகும். இங்குள்ள சிவன் கரபுரநாதர் என்றழைக்கப்படுகிறார்

தொலைபேசி .0427-2221577

தான்தோன்றீஸ்வரர் கோவில்:
சேலத்திலிருந்து 35 கி.மீ தொலைவில் உள்ள பேலூரில் அமைந்துள்ள இக்கோவில் மிகப்பழமை வாய்ந்ததாகும். இங்குள்ள பல வகையான கற்சிற்பங்கள் புகழ்வாய்ந்தவயாகும்.

தொலைபேசி .04292-241400.

அப்பா பைத்தியசாமி கோவில்:
1859 கரூரில் ஜமீன் பரம்பரையில் பிறந்த அப்பா பைத்தியசாமி என்பவர் முக்தி பெற்று சமாதி அடைந்த இடத்தில் கட்டப்பட்ட கோவிலாகும். தை மாதம் அஸ்வினி திதியில் வரும் அவருடைய குருபூஜைக்கு பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் இங்கே வழிபடுவார்கள். இது சேலம் இரயில் நிலையத்திலிருந்து ஒரு கி.மீ தூரத்தில் உள்ளது.

 வழிபாட்டு நேரம் :காலை 5.30 முதல் மதியம் 12 வரை , மாலை 5.30 முதல் இரவு 8.30 வரை

ஆறகலூர் :
ஆறகலூர் மிகப்பழங்காலத்திலேயே புகழ் பெற்ற ஆன்மீகத்தளமாக விளங்கியுள்ளது. பழங்காலத்திலேயே இவ்வூருக்கும் ஆன்மீக தலைநகரமாக விளங்கிய காஞ்சிக்கும் தொடர்புகள் இருந்துள்ளன. இங்கு இரண்டு சமயங்களான சைவம் மற்றும் வைணவத்திற்குரிய கோவில்களாக காமநாதீஸ்வரர் கோவில் மற்றும் கரிவரதபெருமாள் கோவில்கள் உள்ளன. இங்குள்ள காமநாதீஸ்வரர் கோவிலில் எட்டு பைரவர் சன்னதிகள் உள்ளன. இங்கே பைரவருக்கு நடைபெறும் தேய்பிறை அஸ்டமி பூஜை பல்லாயிரகணக்கான மக்கள் வந்து வழிபடும் விழாவாகும். இதற்காக சிறப்பு பேருந்துகளும் இயக்கப்படுகின்றன.

இந்த ஊருக்கு அருகாமையில் உள்ள தியாகனூர் என்ற கிராமத்தில் ஒரே கல்லாலான மிகப்பெரிய புத்தர் சிலை உள்ளது.

 தொலைபேசி .04582-260107.

அயோத்தியாபட்டணம் கோதண்டராமர் கோவில்:
சேலத்திற்கு அருகில் 10 கி.மீ. தொலைவில் உள்ள அயோத்தியாபட்டிணத்தில் அமைந்துள்ள இக்கோவில் சேலம் மாவட்டத்தில் உள்ள புராதனமான கோவில்களுள் ஒன்றாகும். இது ஒரு அழகான விஷ்னு கோவிலாகும். தெய்வம் கோதண்டராமர் என்றழைக்கப்படுகிறார்.

வழிபாட்டு நேரம்:காலை 7 முதல் மதியம் 12வரை , மாலை4 முதல் இரவு 8 வரை
தொலைபேசி .0427-2253500, 8098127383.

மேச்சேரி பத்ரகாளியம்மன் கோவில் :

சேலதிலிருந்த 33 கி.மீ தொலைவிலும் மேட்டூரிலிருந்து 20 கி.மீ. தொலைவிலும் உள்ள பேரூராட்சியான மேச்சேரியிலும் காளியம்மன் கோவிலாகும்.

வழிபாட்டு நேரம். காலை 6 முதல் இரவு 8 வரை

தொலைபேசி . 04298-278133

ஜம்மா மசூதி:
சேலம் நகரத்தின் மையத்தில் திருமணிமுத்தாற்றின் தெற்கு கரையில் அமைந்துள்ள ஜம்மா மசூதியாகும் மிகப்பழமையானதாகவும், மைசூர் அரசர் திப்புசுல்தான் அவர்களால் கட்டப்பட்டதாகும். அவர் இங்கு வழிபாடுகள் நடத்தியும் உள்ளார் என அறியப்படுகிறது.

வழிபாட்டு நேரம்: காலை 9.30 முதல் மாலை 6 வரை

தொலைபேசி : 0427-2267227.

தாரமங்கலம் கைலாசநாதர் கோவில் :
சேலத்திலிருந்து 30 கி.மீ. தொலைவில உள்ள ஒரு பேருராட்சி தாரமங்கலம். இங்கு அமைந்துள்ள கைலாசநாதர் கோவில் பழைவாய்ந்த கோவிலாகும். ரதி மன்மதனுக்கு இங்கு சிலைகள் உள்ளது. இக்கோவில் கற்சிற்பங்கள் மிக பிரசித்தி பெற்றதாகும்.

வழிபாட்டு நேரம்: காலை 7.30 முதல் மதியம் 1 வரை ம்லை 4 முதல் இரவு 8 வரை
தொலைபேசி.04290-252100.