Close

மலர்கண்காட்சி

47-வது ஏற்காடு கோடை விழா மற்றும் மலர்கண்காட்சி

Date : 22nd May to 30th May

சேலம் மாவட்டம், ஏற்காட்டில் சுற்றுலாப் பயணிகளை மகிழ்விக்கும் வகையில் ஆண்டுத்தோறும் ஏற்காடு கோடைவிழா மற்றும் மலர்க்காட்சி சிறப்பாக நடத்தப்பட்டு வருகிறது. அதேபோன்று, இந்த ஆண்டு 47-வது ஏற்காடு கோடை விழா மற்றும் மலர்க்காட்சி வரும் 22.05.2024 புதன்கிழமை அன்று தொடங்கி 26.05.2024 ஞாயிற்றுக்கிழமை வரை 5 நாட்கள் நடைபெறவுள்ளது. மேலும் சுற்றுலாப்பயணிகள் மற்றும் பொதுமக்கள் உள்ளிட்ட பல்வேறு தரப்பினரின் கோரிக்கைக்கிணங்க ஏற்காடு, அண்ணா பூங்காவில் அமைக்கப்பட்டுள்ள மலர்க்காட்சி வரும் 30.05.2024 வியாழக்கிழமை வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. சுற்றுலாப் பயணிகள், பொதுமக்கள், குழந்தைகள் உள்ளிட்ட அனைத்து தரப்பினரையும் மகிழ்விக்கும் வகையில் இக்கோடை விழா நடைபெறவுள்ளது.

47-வது ஏற்காடு கோடை விழாவில் தோட்டக்கலைத் துறையின் சார்பில் சுற்றுலாப் பயணிகளைக் கவரும் வகையில்

7 இலட்சத்திற்கும் மேற்பட்ட மலர்களை கொண்டு இயற்கை வளங்கள் மூலம் மின்சாரம் உருவாக்குவதை எடுத்துரைக்கும் வகையில் பிரமாண்ட காற்றாலை.

சுற்றுச்சூழலில் கடல் வாழ் உயிரினங்களின் பங்கினை உணர்த்தும் வகையில் பவளப்பறைகள், நண்டு, சிற்பி. ஆக்டோபஸ். நட்சத்திர மீன், கடல் குதிரை போன்ற உருவங்களும்,

குழந்தைகளிடம் மரம் நடுதலை ஊக்குவிக்கும் வகையில் காட்டூன் கதாப்பாத்திரங்களான டொனால்டு டக். மிக்கிமௌஸ். டாம் & ஜெரி மரங்களை நடுவது போலவும். நீர் பாய்ச்சுதல் போலவும் காச்சிப்படுத்தப்படவுள்ளது.

30 ஆயிரத்திற்கும் மேற்பட்ட வண்ண மலர் தொட்டிகளைக் கொண்டு மலர்க்காட்சி அமைக்கப்பட்டு வருகிறது.

அண்ணா பூங்கா வளாகம் முழுவதும் வண்ண விளக்குகளால் அலங்கரித்திடவும்.

ஏரி பூங்கா உள்ளிட்ட பல்வேறு இடங்களில் வண்ண மலர்களால் ஆன செல்பி பாயிண்டுகளும் அமைக்கப்பட உள்ளன.

அண்ணா பூங்காவில் பழங்கள் மற்றும் காய்கறிகளை கொண்டு பல்வேறு வடிவ அமைப்புகள் உருவாக்கப்பட்டுள்ளன.

அண்ணா பூங்காவில், ஏற்காட்டில் விளையும்காப்பி இரகங்கள் காட்சிப்படுத்தப்பட்டுள்ளதை தேவைக்கேற்ப சுவைத்து அந்த காப்பி இரங்கனை வாங்கி செல்லவும் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.