Close

மலையேற்றம் ( Trekking )

மலையேற்றபாதை (Trekking Route) – மலையேறுதல் போட்டி

நாள் நேரம் இடம் உடல் தகுதி தொடர்பு கொள்ள வேண்டிய எண்
22.05.2024 காலை 6.30 மணி ஏற்காடு அடிவாரம் வனத்துறையின் சோதனைச் சாவடியிலிருந்து குண்டூர் மலைப்பாதை வழியாக ஏற்காடு அரசினர் மேல்நிலைப்பள்ளியில் முடிவடையும் வரை 15 வயது முதல் 45 வயது வரை முழு உடல் ஆரோக்கியத்துடன் உள்ளவர்கள் 99658-34650

 

 

பின்வரும் கண்ணை கவரும் காட்சிகள் இப்பாதையில் உள்ளன.

  • சேலம் வனக்கோட்டம், சேர்வராயன் தெற்கு வனச்சரகத்திற்கு உட்பட்ட குரும்பப்பட்டி காப்புக்காடு பகுதியில் கொண்டப்பநாயக்கன்பட்டி அடிவாரம் முதல் குண்டூர் கிராமம் வரை குதிரைதடம் என்ற அழைக்கப்படும் மலையேற்றப்பாதையானது சுமார் 5 கிலோ மீட்டர் தூரத்திற்கு 10 கொண்டைஊசி வளைவுகளுடன் இயற்கை அழகுடன் அமைந்துள்ளது.
  • இப்பாதை முழுவதும் காப்புக்காடு வழியாகவே (Reserved Forest) செல்வதனால் இருபுறமும் பசுமை நிறைந்த மரங்களுடன் பூத்து குலுங்கும் மூங்கில்கள், மருத்துவ குணம் நிறைந்த தாவரங்கள் மற்றும் நீரோடை சத்தங்கள், பறவைகளின் ரிங்காரத்துடன் ஓர் இயற்கையான பாதையாக அமைந்துள்ளது.
  • காட்டுமாடு, காட்டுப்பன்றி, புள்ளிமான், சருகுமான், கேளை ஆடு, காட்டுமுயல், கீரிப்பிள்ளை, காட்டுக்கோழி, உடும்பு, மயில், மலைப்பாம்பு போன்ற வன உயிரினங்கள் அதிகமாக தென்படுகின்ற வாய்ப்புகள் உள்ளது.
  • இயற்கையாகவே ஓர் பெரிய பாறையின் அமைப்பு யானையின் உருவத்தில் அமைந்து ஆச்சரியத்தை ஏற்படுத்தும் வகையில் அமைந்துள்ளது.
  • கண்ணை கவரும் வகையில் இரண்டு காட்சி முனைகள் (View Point) அமைந்துள்ளது.

மலையேற்றப்பாதையின் புகைப்படம்