உயிரியல் பூங்காக்கள் மற்றும் நீர்வீழ்ச்சி

வழிகாட்டுதல்

குரும்பப்பட்டி உயிரியல் பூங்கா :

சேலத்திலிருந்து 12 கி.மீ தொலைவில் உள்ளது. இயற்கையான அழகுமிகுந்த சுற்றுசூழலுடன் கூடிய ஒரு சிறிய உயிரியல் பூங்காவாகும். இதை பார்வையிட நுழைவுக்கட்டணம் சிறியவர்களுக்கு ரூ.5, பெரியவர்களுக்கு ரூ.10 ம் வசூலிக்கப்படுகிறது.

தொலைபேசி எண். 0427-2415097

அண்ணா பூங்கா:

அண்ணா பூங்கா ஏரிக்கு அருகாமையில் அமைந்துள்ளது. இதில் கொடைவிழாவின் போது மலர்கண்காட்சி நடைபெறும். இதனுள்ளே உள்ள ஜப்பானிய பூங்கா கண்டிப்பாக கானவேண்டிய ஒன்றாகும். நுழைவு கட்டணம்.
பெரியவருக்கு ரூ.15 , குழந்தைகளுக்கு ரூ.10 வீடியோ கேமரா ரூ.50 கேமரா.ரூ.25 .

தொலைபேசி .04281-222126

கிள்ளியூர் நீர்வீழ்ச்சி:

ஏற்காட்டிலிருந்து 3 கி.மீ. தொலைவில் உள்ளது கிள்ளியூர் நீர்வீழ்ச்சி ஏரியிலிருந்து வழிந்தோடும் நீர் இங்கு நீர்வீழ்ச்சியாக விழுகிறது.

தொலைபேசி..0427-2416449.