Close

சேலம் மாவட்ட நகர் ஊரமைப்பு அலுவலகம்

தமிழ்நாடு அரசு 10.06.93 தேதியிட்ட வீட்டுவசதி மற்றும் நகர வளர்ச்சித்துறை அரசாணை எண் 420ல் 1971 வருடத்திய நகரமைப்பு சட்டம் பிரிவு 10(1) ன் படி சேலம் உள்ளூர் திட்டகுழும பகுதிகளை வரையறுத்துள்ளது.10.02.97 தேதியிட்ட வீட்டுவசதி மற்றும் நகர வளர்ச்சித்துறை அரசாணை எண் 56 ல் 1971 வருடத்திய நகரமைப்பு சட்டம் பிரிவு 10(4) ன் படி, பழய சேலம் நகராட்சி பகுதிகளுடன், அதை சுற்றியுள்ள 154 கிராமங்களையும் உள்ளடக்கிய பகுதியை சேலம் உள்ளூர் திட்ட குழும பகுதியாக அறிவித்துள்ளது. இந்த உள்ளூர் திட்ட குழும பகுதி 17,74,122 மக்கள் தொகையை உள்ளடக்கிய 675.59 சதுர கிலோ மீட்டர் பரப்பளவை கொண்டதாக உள்ளது.01.09.93 தேதியிட்ட வீட்டுவசதி மற்றும் நகர வளர்ச்சித்துறை அரசாணை எண் 759 மற்றும் 19.08.97 தேதியிட்ட அரசாணை எண்.282 ல் குறிப்பிட்டுள்ளவாறு மாவட்ட ஆட்சித்தலைவரை, தலைவராகவும், நகரமைப்புத்துறை இனை இயக்குநரை உறுப்பினர் செயலராகவும் கொண்டு உள்ளுர் திட்ட குழமம் உருவாக்கப்பட்டுள்ளது. சேலம் உள்ளூர் திட்ட குழுமம் சேலம் மாநகராட்சி, எட்டு பேருராட்சிகள் மற்றும் ஏலு ஊராட்சி ஒன்றியங்களையும் உள்ளட்க்கியுள்ளது.

சேலம் உள்ளூர் திட்ட குழும பகுதிகள்

I. சேலம் மாநகராட்சி

II. பேரூராட்சிகள்
1. கண்ணங்குறிச்சி (சர்வே எண் 237 முதல் 261 வரையுள்ள பகுதிகள் நீங்களாக)
2.இளம்பிள்ளை
3. மல்லூர் (கி.எண்.122 வேங்காம்பட்டி&கி.எண்.129 மல்லூர்)
4. பனைமரத்துப்பட்டி
5. அயோத்தியாபட்டிணம்
6. ஓமலூர் (கி.எண்.60ஓமலூர் (பகுதி) &கி.எண்.58கோட்டைமேட்டுப்பட்டி (பகுதி)
7. கருப்பூர்
8. தாரமங்கலம்(கி.எண்.76 தாரமங்கலம்&கி.எண்.78 கசுவிரெட்டிபட்டி)

III. உராட்சி ஒன்றியம்
A. சேலம் உராட்சி ஒன்றியம்
B.பனைமரத்துப்பட்டி உராட்சி ஒன்றியம் (பகுதி)
C. அயோத்தியாபட்டினம் உராட்சி ஒன்றியம்(பகுதி)
D.வீரபாண்டி உராட்சி ஒன்றியம்(பகுதி)
E. ஓமலூர் உராட்சி ஒன்றியம்(பகுதி)
F. தாரமங்கலம் உராட்சி ஒன்றியம்(பகுதி)
G. மகுடஞ்சாவடி உராட்சி ஒன்றியம்(பகுதி)

திட்டம்
I – பெருந்திட்டம்
நிலபயன்பாட்டு பட்டியல்

சேலம்

சேலம் இரும்பாலை

மேட்டூர்

ஆத்தூர்

ஏற்காடு

எடப்பாடி

 

வரைபடங்கள்

II – விரிவான வளர்ச்சி திட்டம் (DD)

விரிவான வளர்ச்சி திட்ட வரைபடங்கள்

1. அழகாபுரம்_1
2. அழகாபுரம் _2
3. அழகாபுரம்_3
4. அழகாபுரம்_4
5. அழகாபுரம்_5
6. அம்மாபேட்டை விரிவாக்கம்
7. அன்னதானபட்டி_2
8. தாதகாபட்டி விரிவாக்கம்
9. தாதகாபட்டி_1
10. தாதகாபட்டி_2
11. தாதுபாய்குட்டை
12. தேவாங்கபுரம் விரவாக்கம்
13. ஹஸ்தம்பட்டி பிட் – II
14. ஹாஸ்டல் கிரௌன்ட்
15. கொண்டலாம்பட்டி_1
16. கொண்டலாம்பட்டி_2
17. குமாரசாமிபட்டி விரிவாக்கம்
18. லோகி செட்டி டேங்க் விரிவாக்கம்
19. வடக்கு மரவணேரி
20. பெரியேரி
21. ரத்தினசாமிபுரம்
22. ரெட்டியூர்_2
23. ரெட்டியூர்_4
24. சேலம் பெங்களூர் சாலை பகுதி-II
25. சேலம் கிழக்கு ரயில் நிலையம் விரிவாக்கம்
26. தெற்கு மரவணேரி விரிவாக்கம்
27. சூரமங்கலம்_1
28. சூரமங்கலம்_2
29. சூரமங்கலம்_5

சட்டங்கள் மற்றும் விதிமுறைகள்
சுற்றறிக்கைகள்

அங்கீகரிக்கப்படாத வீட்டு மனைகள் வரைமுறைபடுத்துதல்

அங்கீகரிக்கப்படாத கட்டிடங்கள் வரைமுறைபடுத்துதல்

சேலம் உள்ளூர் திட்டப் பகுதிக்கான வரைவு மாஸ்டர் பிளான் 2041:

பழைய சேலம் உள்ளூர் திட்டப் பகுதிக்கான (உ.தி.ப) முதல் முழுமை திட்டம் தயாரிக்கப்பட்டு, 2005 ஆம் ஆண்டு அரசின் ஒப்புதலை தொடர்ந்து நடைமுறைக்கு வந்தது. அந்த முழுமை திட்டமானது பழைய சேலம் நகராட்சிப் பகுதியை உள்ளடக்கி சுற்றியுள்ள 154 கிராமங்களை சேர்த்து 643.17 சதுர கிமீ பரப்பளவுக்கு தயாரிக்கப்பட்டது. இத்திட்டம் 2011 ஆம் ஆண்டு வரை பழைய சேலம் உ.தி.ப-இன் எதிர்கால வளர்ச்சிக்கான நில பயன்பாட்டு கட்டமைப்பை வழங்கியது.

இப்போது விரிவாக்கப்பட்ட சேலம் உ.தி.ப-க்கான அடுத்த முழுமை திட்டம் 2041-ன் வரைவு 1273.20 சதுர கிமீ பரப்பளவில் இந்திய அரசின் AMRUT துணைத் திட்டத்தின் கீழ் GIS தளங்களைப் பயன்படுத்தி தயாரிக்கப்பட்டுள்ளது. விரிவாக்கப்பட்ட சேலம் உ.தி.ப-வின் வரைவு முழுமை திட்டத்தை அரசாணை G.O.(Ms).எண்.8, வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சித் துறை, தேதி: 13.01.2024, தேதி: 13.01.2024 -ன் வாயிலாக, அதன் உள்ளடக்கத்தை பொதுமக்கள் பார்வைக்காக அறிவிப்பு செய்ய தமிழ்நாடு அரசு ஒப்புதல் அளித்துள்ளது. பொது மக்கள் வரைவுத் திட்டத்திற்கு தங்கள் ஆட்சேபனைகள் மற்றும் ஆலோசனைகள் ஏதேனும் இருப்பின் அவற்றை தெரிவிக்கலாம்.

மேலும் www.salemlpamasterplan.com என்ற இணையதளத்தைப் பார்வையிட்டு அதன் மூலம், முழுமை திட்டம் என்றால் என்ன என்பதைப் பற்றியும், விரிவாக்கம் செய்யப்பட்ட சேலம் உள்ளூர் திட்டப்பகுதிற்காக தயாரிக்கப்பட்ட வரைவுத் திட்டத்தைப் பற்றியும் மக்கள் அறிந்து கொள்ளலாம். வரைவு முழுமை திட்டம், சேலம் உ.தி.ப-வில் உள்ள ஒவ்வொரு நிலத்திற்கும் நிலப் பயன்பாடு முன்மொழியப்பட்டு கொண்டுள்ளது. அதன் அடிப்படையில் மட்டுமே எதிர்கால வளர்ச்சிகள் ஒழுங்குபடுத்தப்படும். எனவே பொதுமக்கள் மேற்கண்ட இணையதளத்தில் தங்களது சொந்த நிலத்திற்கான முன்மொழியப்பட்ட நில பயன்பாட்டை சரிபார்த்து, தங்கள் ஆட்சேபனைகள்/ஆலோசனைகளை ஏதேனும் இருப்பின் அந்த இணையதளத்திலேயே பதிவு செய்யலாம். மேலும் ஆட்சேபனைகள் மற்றும் ஆலோசனைகளை

உதவி இயக்குநர்,
மாவட்ட நகர் ஊரமைப்பு அலுவலகம்,
சேலம் உருக்காலை பிரதான சாலை,
தளவாய்ப்பட்டி கிராமம்/பஞ்சாயத்து,
சேலம் – 636302

என்ற முகவரிக்கு அஞ்சல் மூலமாகவோ அல்லது ddslmregion[at]gmail[dot]com என்கிற மின்னஞ்சல் மூலமாகவோ மாவட்ட நகர் ஊரமைப்பு அலுவலகத்திற்கு அனுப்பலாம்.